கோவை மாநகராட்சி 83-வது வார்டு ஹைவேஸ் காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.