கோவை மாநகராட்சி 92-வது வார்டு சுகுணாபுரம் அருகே அப்பர் செந்தமிழ் நகரில் உள்ள மதரசா லைன், பூண்டுக்காரர் லைன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரும், மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் மழைநீரும் சாலைகளில் செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
ரிக்சானா பர்வின், சுகுணாபுரம்.