சாலையில் கழிவுநீர்

Update: 2024-09-15 11:57 GMT

சென்னை புளியந்தோப்பு, வி.ஓ.சி.நகர் 5-வது தெருவில் சாலையில் கழிவுநீர் ஆறுபோல பாய்ந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை கடக்க மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், அதிக அளவு பொதுமக்கள் உள்ள பகுதி என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிக அளவு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஓடும் கழிவுநீரை சுத்தம் செய்யவும், கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்