சென்னை பிராட்வே, பிரான்சிஸ் ஜோசப் தெருவில் கழிவுநீர் நிரம்பி சாலைகளில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியை கடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களிக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.