திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள சுகாதார வளாகத்தில் முறையாக தண்ணீர் வசதி இல்லாததாலும், கதவுகள் உடைந்து காணப்படுவதினாலும் அவற்றை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.