புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியின் பிரதான முக்கிய சாலையான அண்ணாசாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்க்காலின் மேற்பகுதி சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.