போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தர்மத்துப்பட்டி 10-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் சாக்கடை கால்வாயை தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.