பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.