காஞ்சீபுரம் மாவட்டம், நீா்வள்ளூர் கிராமத்தில் குட்டை ஒன்று உள்ளது. அந்த குட்டை அந்த பகுதி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் கழிவுநீர் குட்டைக்கு செல்லாமல் சாலையிலேயே தேங்கி கிடக்கிறது. எனவே அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தங்கள் மெத்தனபோக்கை கடைபிடிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.