செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மேற்கு அன்னை அஞ்சுகம் நகர், திரு.வி.கா. தெருவில் கழிவுநீர் குட்டைபோல தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் ஆகிறது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குட்டை போல தேங்கியுள்ளதால், இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.