தாரமங்கலம் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை உள்ளது. இதன் எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?