தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-08-11 12:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவும் அமையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்