ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வடக்கு தெரு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.