விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள சகுந்தலா நகாில் உள்ள தெருவில் சுமார் ஒரு மாதகாலமாக கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.