பெரம்பலூர் நகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலைகளில் செல்கிறது. இந்தநிலை அடிக்கடி ஏற்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடைகளை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.