சென்னை வேளச்சேரி, பாலகிருஷ்ணா நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழிகிறது. சாலைகளில் கழிவுநீர் கசிந்து ஓடுவதால் அந்த பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.