சென்னை வியாசர்பாடி, மூர்த்தி சங்கர் தெரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதானல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பள்ளி மாணவர்கள் கால் தவறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் புதிய கால்வாய் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.