சென்னை கொளத்தூர், செங்குன்றம் மெயின் ரோட்டில் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி ஆபத்தான முறையில் சேதமடைந்து இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் புதிய கழிவுநீர் கால்வாய் மூடியை அமைத்து கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.