கால்வாயில் அடைப்பு

Update: 2024-08-04 12:27 GMT

கோவை பீளமேடு 26-வது வார்டு நேரு நகர் பொது கழிப்பிடத்தின் பின்புறம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்