சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் வழியாக திருக்கோவிலூர்- திருவண்ணாமலை செல்லும் சாலையின் இருபுறத்திலும் வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையின் இருபுறத்திலும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.