கண்டமனூர் ஊராட்சி புதுராமச்சந்திராபுரம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேனி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.