திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, பாஞ்சாலி நகர் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் செல்லும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தியும் ஆகிறது. மேலும், அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சுத்தம் செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.