நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதில் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தண்ணீர் தேங்கி நிற்பது சிரமமாக உள்ளது. ஏற்கனவே வாகன நிறுத்தம் இடம் சரிவர இல்லாத கலெக்டர் அலுவலகத்தில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.