கடமலை-மயிலை ஒன்றியம் ஆத்தங்கரைபட்டியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுகள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் முறையாக செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.