திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர், மதனங்குப்பம் சாலை வி.பி.சி. நகர் விரிவாக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் இணைப்பு மற்றும் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்சு போன்ற வாகனங்களும் இந்த பகுதிகளுக்கு வர முடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.