விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.