சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-06-23 17:54 GMT
திருக்கோவிலூர் அருகே நரியந்தல் கிராமத்தில் உள்ள திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் தூர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைப்பதோடு, கழிவுநீரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்