திருச்சி மாநகராட்சி செல்வநகர் 2-வது வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் குறுகளான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் அடிக்கடி தூர்ந்துபோவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.