தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி. தெரு பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் செடிகள் அவ்வப்போது அடர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் சீராக வெளியேற முடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள கால்வாயில் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும், இந்த கால்வாயில் செடிகள் மீண்டும் வளராமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.