ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட மூக்கையூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.