சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமம் காளியம்மன் கோவில் தெரு 1-வது வார்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரமற்ற நிலையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.