சின்னசேலம் நகர சாலையோரம் மழை நீர் வடிகால் வாய்க்கால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் சாலையோரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையோரத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.