தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி தெருவில் ஆறுபோல் செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.