கெங்குவார்பட்டியில் உள்ள ஆற்றில் இறைச்சிக்கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் வீடுகளுக்கான குடிநீர் குழாயில் வரும் தண்ணீரால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றுநீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.