புகழூர் வள்ளுவர் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது சர்வீஸ் சாலை அருகே கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாயில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.