கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் அருகில் உள்ள நாராயணசாமி நகரில் பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.