ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறையில் தண்ணீர் இணைப்பு இல்லை. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கழிவறையில் தண்ணீர் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கழிவவறைக்கு தண்ணீர் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.