திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, பல்லவன் நகரில் ஏரி ஒன்று உள்ளது. ஏரியில் அந்த பகுதி வழியாக செல்லும் கழிவுநீரானது கலக்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மிகபெரிய சுகாதார சீர் கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.