தாளவாடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு செல்லும் வடிகாலில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?