சிதிலமடைந்த கழிவறை

Update: 2024-02-25 10:43 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, திருவள்ளுவர் அவென்யூ ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே பீரங்கிமேடு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு சுமார் 20-க்கும் அதிகமான மழலை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள கழிவறை கடந்த 4 மாதங்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்