திருமணிமுத்தாரை தூர்வார வேண்டும்

Update: 2024-02-18 17:32 GMT

சேலம் செவ்வாய்பேட்டை வழியே செல்லும் திருமணிமுத்தாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் காட்சி அளிக்கிறது. ஆற்றின் நீர் செல்லும் வழி அனைத்தும் மணல் மேடாக உள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ஆற்றின் நடுப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் நீர் செல்ல வழியில்லாமல் ஆற்றின் நடுவே செடிகள் முளைத்து, கழிவுகளும் தேங்கி நிற்கிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து திருமணிமுத்தாரை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்