ராமநாதபுரம் நகர் பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிடவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.