ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் செல்லும் சாக்கடை வடிகாலில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?