நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டி ஏ.டி. காலனியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையின் நடுவே தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவம் அபாயம் இருக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.