தூர்வார வேண்டும்

Update: 2024-01-14 07:53 GMT

கரும்பாட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆண்டிவிளை கிராமத்தில் வெங்கலராஜன் கோட்டை ஆத்துபாலத்தின் கீழ் பகுதியில் வெட்டிமுறிச்சான் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் மணக்குடி காயல் பகுதியை சென்றடைகிறது. தற்போது இந்த கால்வாய் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி கழிவுநீர் ஓடை போல் இருப்பதுடன், கழிவுகள் தேங்கி மடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வன், ஆண்டிவிளை.

மேலும் செய்திகள்