சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை

Update: 2023-12-31 16:42 GMT

சேலம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் எம்.ஜி.ஆர். நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளன. இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்