ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபடுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.