கோபி பஸ் நிலையம் அருகே உள்ள வங்கியின் நுழைவுவாயில் முன்பு செல்லும் வடிகால் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வங்கிக்கு வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?