கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவில் இருந்து கம்பம்மெட்டு சாலை பிரிவு வரை சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டதுடன் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.