சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியின் 16-வது வார்டில் உள்ள நேதாஜி நகர் பூங்காவை சுற்றியுள்ள வீடுகளுக்கு கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தெருக்களிலும், நேதாஜி நகர் பூங்காவிலும் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் சாலையில் செலவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவு தேங்காமல் நிற்கும் வகையில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.